20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் கருத்து வெளியிட்டார் ஐ தே க வின் பொதுச் செயலாளர்!

காரியவசம்
காரியவசம்

20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைதம் தெரிவித்துள்ளார்.

சமயத் தலைவர்களும்கூட தங்களது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டுசென்று, நாடாளுமன்றில் நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது என்றும் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டத்தின் சில உள்ளடக்கங்களுக்கு மாத்திரமே சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முழுமையான 20ஆம் திருத்தத்திற்கு சில உறுப்பினர்களின் எதிர்ப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.