ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

c13bc0d7 fde4 4681 bc91 ee33c6beb412 696x465 2
c13bc0d7 fde4 4681 bc91 ee33c6beb412 696x465 2

முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்தல்காரர்களால் கடுமமையாக தாக்கப்பட்டமையினை கண்டித்து வடமாகாண ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

c13bc0d7 fde4 4681 bc91 ee33c6beb412 696x465 1
c13bc0d7 fde4 4681 bc91 ee33c6beb412 696×465 1

மாவட்ட செயலத்திற்கு முன்னால் ஆரம்பமான கவனயீர்ப்பு போரட்டத்தில் வனவளத் திணைக்கள வேலிக்கு தேக்குமரம் வேடிக்கை பாக்கிறாயா?, காவல்துறையா கள்ளமரம் வெட்டும் துறையா?, ஊடக அமைச்சரே உறக்கமா?, கள்ளமரம் வெட்டுபவர்களுக்கு காவல் வனவளத்திணைக்களமா? போன்ற கோசங்களை தாங்கியவாறான பாதாதைககள் மற்றும் மரக்கன்றுகள், வெட்டப்பட்ட பட்ட மரக்கிளைகளை கையில் தாங்கியவாறு ஊடகவியலாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பேணி கோசங்களை சொல்லியவாறு முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை சென்றடைந்துள்ளார்கள்.

அங்கு மாவட்ட உதவி பொலீஸ் அத்தியட்சகர் றுவான் குமராசேகரவிடம் ஊடகவியலாளர்களின் கோரிக்கை அடங்கிய மனு வாசிக்கப்பட்டு உடகவியலாளர்களால் கையளித்துள்ளதுடன் காடு அழிக்கப்படுவததை தடுக்ககோரி மரக்கன்று ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குள் கவனயீர்ப்பு பேரணியாக சென்ற ஊடவியலாளர்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கான மனுவினை உதவி மாவட்ட செயலாளர் எஸ்.கேகிதாவிடம் கையளித்துள்ளதுடன் மரக்கன்று ஒன்றினையும் வழங்கி வைத்துள்ளார்கள்.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்கள அலுவலகம் சென்ற ஊடகவியலாளர்கள் அங்கு உயர் அதிகாரிகள் இல்லாத நிலையில் ஊடகர்கள் தாக்கப்பட்டமைக்கு தங்கள் எதிர்பினை தெரிவித்து வனவளத்திணைக்கள உயர் அதிகாரிகளுக்கான மனு ஒன்றினை உத்தியோகத்தர்களிடம் கையளித்துள்ளதுடன் வனவளத்திணைக்களத்திற்கு முன்பாக உள்ள வீதியில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்துள்ளார்கள்.

b52d51f6 f48b 42fc b9d6 b9f648cc2f8f 629x420 1
b52d51f6 f48b 42fc b9d6 b9f648cc2f8f 629×420 1

வடக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.