வாக்களிப்பு நேரம் தொடர்பில் வாக்காளர்கள் குழப்பமடையத் தேவையில்லை

votinsl g
votinsl g

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகளில் வாக்களிக்கும் நேரம் 7 மணிமுதல் 4 மணிவரை என குறிப்பிடப்பட்டுள்ளதால் வாக்காளர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூலி இது தொடர்பில் தெரிவிக்கையில்;

தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டவை ஆகும். அந்த வாக்குச்சீட்டுகளில் காலை 7 மணிமுதல் 4 மணிவரையே வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால், தேர்தலின் வாக்களிக்கும் நேரம் 1 மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்த மானியில் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதனால் வாக்காளர்கள் குழப்பமடைய தேவையில்லை. காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை வாக்களிக்க முடியும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.