சிறையில் தள்ளிவிட்டு குற்றமற்றவர் என்று விடுவிக்கும் கலாசாரத்தை நிறுத்துங்கள்-நாயிக்

20201016154205 IMG 1992
20201016154205 IMG 1992

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதினை சிறையில் தள்ளிவிட்டு குற்றமற்றவர் என்று விடுவிக்கும் கலாசாரத்தையும் நிறுத்துங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தற்போதைய அரசியல் பேச்சாளராகிய நாயிக் மௌலவி தெரிவித்துள்ளார்.

வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி. அவர் எதாவது பிழைகள் செய்ந்திருந்தால் அவற்றை விசாரிக்க உரிமை இருக்கிறது. ஆனால் அவர் பக்கத்தில் நியாயம் இருக்கிற போது அவரை சிறையில் அடைத்துத்தான் வெளியில் விடுவோம் என்பதை வண்மையாக கண்டிக்கிறோம் .

எனவே மக்களிடம் கேட்பது என்னவென்றால் அவரை விசாரியுங்கள் ,நடவடிக்கை எடுங்கள் ஆனால் சிறையில் தள்ளிவிட்டு அவரை குற்றமற்றவர் என்று விடுவிக்கும் இந்த கலாசாரத்தை நிறுத்துங்கள் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் முக்கியஸ்தர்களான முத்து முகமது, முனாயித் மௌலவி, நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, முகமது லரீப், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.