20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவோம்- ரோஹன திஸாநாயக்க

1111 3
1111 3

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் பலப்பட வேண்டுமாயின் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்.அரசியல் காரணிகளை தவிர்த்து 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்‌ஷவின் நிர்வாகத்தை நடுத்தர சாதாரண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சுயமாக முன்னேற்றமடையும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மக்களின் குறைகளை ஆராயவே மக்கள் மத்தியில் செல்கிறார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் இடம் பெற்ற இரண்டு தேசிய தேர்தல் ஊடாக புறக்கணித்துள்ளார்கள்.மக்களின் எதிர்பார்ப்புக்களை கொண்டு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நிர்வாகத்தை பலப்படுத்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அரசியல் காரணிகளை தவிர்த்து திருத்தம் வெற்றிப்பெற ஆதரவு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.