நிறுவன ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்கவேண்டும் – வைத்தியர்கள்

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஊழியர்கள் பணிகளுக்கு செல்லும்போது பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதைக் குறைக்கவும், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தனியார் போக்குவரத்து சேவைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வைத்தியர்கள் சுகாதார அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் கண்டிப்பாக அமுல்படுத்தப்படவேண்டும் என விடேச வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி சிலர் செயற்பட்டு வருவதாகவும்
இவ்வாறு செயற்பட்டால் நிலைமை மோசமடையும் அபாயம் உள்ளது எனவும் வைத்தியர்கள் சுகாதார அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதற்கான முதல் கட்டத்திலிருந்து சுகாதார அமைச்சுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்த சரியான ஒருங்கிணைப்பு இல்லாததனால் தற்போதுள்ளதை விடக் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஊழியர்கள் பணிகளுக்காகச் செல்லும் போது பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதைக் குறைக்கவும், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தனி யார் போக்குவரத்து சேவைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வைத்தியர்கள் சுகாதார அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர்.