20ஆவது திருத்ததை வியாழேந்திரன், பிள்ளையான் எதிர்க்க வேண்டும்- இரா. துரைரெட்ணம்

11 4
11 4

தமிழ் மக்களுக்கு எதிராக, ஆபத்தை விளைவிக்க ஜனநாயக விரோத அடிப்படையில் முன்வைக்கப் போகும் 20 திருத்தச் சட்டத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இருவரும் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம்  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மசாபா மன்ற கட்சி காரியாலயத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் ,

இலங்கை அரசாங்கம் புதிய ஆட்சியை அமைத்து 3 மாதங்கள் கடந்த நிலையில் புதிய அரசு 20 திருத்தச்சட்டம் தொடர்பான பல விடயங்களையும் உள்ளடக்கி பாராளுமன்றம் கொண்டு வர முயற்சித்த வேளையில் நீதிமன்றம் சென்று பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதிநிதிகளை நீண்ட காலத்துக்கு பின்பு அதிகூடிய வாக்குகளையளித்து 4 தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்யப்பட்டது என்பது ஒரு செய்தியை தெளிவாக தமிழ் மக்கள் கூறியுள்ளனர்.

அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் நலன்கள் தொடர்பாக இந்த 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பாகவும் சரியாகவும் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இம் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அந்த வாக்கை பெற்ற தமிழ் பிரதிநிதிகள் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு விரோதமாக முன்வைக்கப்பட்டிருக்கும் 20 திருத்தச் சட்டத்துக்கு சார்பாக வாக்களிக்கப் போகின்றார்களா? எதிர்ப்பாக வாக்களிக்கப் போகின்றார்களா? என்பதை சர்வதேசமும் மாகாண தேசியமும் உற்று நோக்கி வருகின்றது.

மட்டக்களப்பை பொறுத்தமட்டில் மக்கள் நலன் சார்ந்து தெரிவு செய்யப்பட்ட குறிப்பாக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய இருவரும் தமிழ் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க ஜனநாயக விரேத அடிப்படை சம்மந்தப்பட்ட தொடர்பாக முன்வைக்கப்போகும் 20 திருத்தச்சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் .

எனவே அந்த மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்த மக்கள் வாக்களித்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர்கள் சிறப்பானவர்கள் தமிழ் மக்களுக்கு விரோதமாக செல்லமாட்டர்கள் என நாங்கள் நம்புகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களித்த தமிழ் மக்கள் தமக்கு விரோதமாக செல்லமாட்டர்கள் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள் .
எனவே அப்படி ஆதரித்து வாக்களிக்கும் பட்சத்தில் மக்கள் இவர்களை நிகராகரிக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.