தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க இதுவே சரியான நேரம்-குமரகுருபரன்

Nalliah Kumaraguruparan 1
Nalliah Kumaraguruparan 1

வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சரியான தருணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசிய பணிக்குழுவின் தலைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (Nov.07) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “ஜனாதிபதி, தன்னை தாக்க முனைந்தவரையே சிறையிலிருந்து விடுவித்தவர், மன்னிப்பு வழங்கியவர். அவரின் மனிதநேயம் நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு இடமளிக்கும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரால் தமது வெற்றியின் பின் சிறையிலிருக்கும் இராணுவத்தினரை விடுவிப்பது தொடர்பில் தேர்தல் மேடைகளில் அறிவிக்கப்படுகின்ற இந்த தருணத்தில் மன்னிப்பு கொடுக்கக்கூடிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கி அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்க முடியமென தமிழினம் எதிர்பார்க்கின்றது

“பல வருடங்களாக சிறையில் வாடும் உறவினர்களின் ஏக்கத்துக்கு ஜனாதிபதி செவிமடுப்பார் என்று நம்புகின்றோம்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.