மீன் சந்தையில் பணியாற்றும் நால்வருக்கு தொற்று உறுதி!

202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 2
202004101403213113 5 states worst hit by coronavirus in India A quick look at SECVPF 2

கொரோனா தொற்று நிலைமை காரணமாக கொட்டாவை நகர சபைக்குட்பட்ட மீன் சந்தையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன் சந்தையில் பணியாற்றும் நால்வருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவை பொது சுகாதார பரிசோதகர் டி.எம்.திலகரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த நான்கு நோயாளர்களும் சிகிச்சைக்காக களுத்துறை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களுடன் நேரடி தொடர்பை பேணிய நபர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.