ஏ.ரி.எம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

WhatsApp Image 2020 10 21 at 20.33.16
WhatsApp Image 2020 10 21 at 20.33.16

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.ரி.எம். இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வந்தவர்களுக்கு அதனை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததையடுத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்களின் ஏ.ரி.எம். காட்டை கொண்டு பணமோசடி செய்து வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை போலி ஏ.ரி.எம் காட்டுடன் இன்று வியாழைக்கிழமை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.


குறித்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் அங்குள்ள வங்கியின் ஏ.ரி.எம். காட்மூலம் பணம் பெறச் சென்றுள்ளார் அவருக்கு ஏ.ரி.எம். இயக்கி பணம் தெரியாத நிலையில் அங்கு நின்ற குறித்த நபர் அவருக்கு உதவுவது போல அவரின் ஏ.ரி.எம் காட் மூலம் ஏ.ரி.எம் இயந்திரத்தில் 4 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார் 


இந்த நிலையில் அவரின் வங்கியில் இருந்த 1 இலச்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் மாயமாகியுள்ளது இதனையடுத்து அவர் வங்கிக்கு சென்றபோது அவர் வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் ஊடாக காத்தான்குடியில் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது இதனையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிசார் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வங்கி ஏ.ரி.எம். இயந்திரத்திலுள்ள சிசிடி கமராவில் பணத்தை மோசடி செய்தவைரை கண்டுபிடித்து கைது செய்தனர்

 
களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.ரி.எம். இயந்திரத்துக்கு அருகில் நின்றிருந்ததாகவும் அங்கு சென்ற குறித்த நபர் வங்கி இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாது இருந்தபோது அவருக்கு உதவி செய்வது போல சென்று அவரின் ஏ.ரி.எம் காட்டை வாங்கி இயந்திரத்தில் உட்செலுத்தும் போது அதன் இரகசிய இலக்கதை தனது கைகளில் எழுதிவிட்டு அவருக்கு பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு  அவருக்கு தெரியாமல் அவரின் ஏ.ரி.எம். காட்டுக்கு பதிலாக கீழே எடுத்து ஒருவரின் அதே வங்கியின் எ.ரி.எம் காட்டை அவரிடம் மாற்றி கொடுத்து விட்டு அவரின் அந்த ஏ.ரி.எம் காட்டை எடுத்து கொண்டு சென்று ஏ.ரி.எம். பணத்தை பெற்றுள்ளதாகவும் 
அவ்வாறே வேறு ஒருவருக்கு உதவி செய்வது போல் அவரின் ஏ.ரி.எம். காட்டை மாற்றி முதலில் எடுத்தவரின் காட்டை அவருக்கு மாறி வழங்குவது அந்த காட் மூலம் அவர்களின் பணத்தை பெறுவது இப்படடியாக வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் ஏ.ரி.எம். காட்டை மோசடி செய்து பணம் எடுத்துள்ளதாக காவற்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது

 
இதில் கைது செய்யப்பட்டவர் காத்தான்குடி கர்ப்பலா வீதியைச் சேர்ந்த ரெலோ பாயிஸ் எனவும் இவர்  பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டனைபெற்று சிறையில் இருந்து வெளி வந்துள்ளதாகவும் கல்முனை, கொழும்பு ,மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையிலுள்ளவர் எனவும் போதை பொருளுக்கு அடிமையாகியவர் எனவும் இதில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககாவற்துறையினர் தெரிவித்தனர்