நாட்டுக்கு சேவையாற்ற ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் தேவை என்கிறார் நா.உ டயானா கமகே!

dayana gamage
dayana gamage

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீது தனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வாக்களித்தேன் அவ்வளவுதான், நான் ஏதேனும் வரப்பிரசாதங்கள் பெற்றிருப்பதாக பலரும் கூறுகின்றனர். அவ்வாறானவர்கள் முடிந்தால் அதனை நிரூபித்து காட்டவேண்டும்.

இன்று எனது மனசாட்சிக்கு இணங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன். காரணம் ஜனாதிபதி தேர்தலுக்காக பல கோடிக்கனக்கான பொதுமக்கள் நிதியை செலவு செய்துள்ளோம்.

அவ்வாறு ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்து, அவரின் கைகளை கட்டி நீந்துமாறு பார்ப்பது பொறுத்தமற்ற ஒன்று.

நாட்டுக்கு சேவையாற்ற ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் தேவை. ஆகவே கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

அவர் நாட்டை எதிர்காலத்தில் கட்டியெழுப்புவார். அடுத்தது சஜித் பிரேமதாஸ அல்லது பொன்சேக்கா போன்ற யாராவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் இந்த அதிகாரங்களை வேண்டாமென கூறுவார்களா?” என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.