யாழ்ப்பாணம் சாவகச்சேரிபகுதியில் விபத்து:குடும்பஸ்தர் படுகாயம்

df2084e7da23d71d0eedef5ed69b28ac XL
df2084e7da23d71d0eedef5ed69b28ac XL

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற கார்- மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(23) காலை இடம்பெற்றுள்ளது.

A9 வீதியிலிருந்து குறுக்கு வீதிக்கு பயணிக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளும் பின்னால் வந்த காரும் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.