ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் விரைவில் !

download 8 3
download 8 3

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் ஒன்று எதிர்வரும் வாரத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பல பெயர்கள் முன்மொழியப்பட்ட போதிலும் இது குறித்த இறுதி தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த ஒரு நேரடி ஆசனமும் கிடைக்கப்பெறாத நிலையில் ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் மாத்திரம் கிடைத்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது