நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

coronabusiness 1588833381344
coronabusiness 1588833381344

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவங்கொடை மற்றும் பெலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 227 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 36 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 4,313ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,784 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 3,966தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா 89 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 3,803 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 537 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

நாட்டில் இன்றுவரை 441990 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேல் மாகாணத்தின் களுத்துறை, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும், மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசம், வெல்லம்பிட்டிய மற்றும் குளியாப்பிட்டியவில் 5 காவல்து​றை பிரிவுகள் உள்ளிட்ட 64 காவல்து​றை பிரிவுகளுக்கு இதுவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ள​மை குறிப்பிடத்தக்கது.