யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் மூன்றாவது ஆய்வு மாநாடு

DSC01242
DSC01242

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வியாபார முகாமைத்துவ கற்கைககள் பீடத்தின் வியாபார கற்கைகளுக்கான ஆய்வு மாநாடு இன்று(26) காலை இடம்பெற்றது.இவ் மாநாடானது கொவிட் 19 காரணமாக மெய்நிகர் மூலமாக வியாபார மாற்றம் மேலைத்தேய கீழைத்தேயத்திற்கான ஒன்றிணைப்பு  எனும் கருப்பொருளில் நடைபெற்றது.

DSC01216
DSC01216


இம் மாநாடானது கணக்கியல், நிதியியல், வியாபார பொருளியில், முயற்ச்சியாண்மை, மனிதவள முகாமைத்துவம், அறிவியல் முகாமைத்துவம் மற்றும் திட்டமுகாமைத்துவம், சந்தைப்படுத்தல், விருந்தோம்பல் முகாமைத்துவம் போன்ற துறைகளில் உள்ளவற்றில் உள்ள விடயங்களை எடுத்துக்காட்டுவதில் இலக்காக கொண்டு அமைந்துள்ளது.

DSC01169
DSC01169


வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆய்வு மாநாட்டில் பிரதம விருந்தினராக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பேராசிரியர் எஸ்.ஏ.அரியதுறை, கலந்து கொண்டதோடு யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் துணைவேந்தர், போரசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா, வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன், கலாநிதி ஏ.றுக்ஷன்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC01196
DSC01196


இம் மாநாட்டில் மொறட்டுவ பல்கலைகழகத்தின் வியாபார முகாமைத்துவ பீடாதிபதி, மூத்த பேராசிரியர் எஸ்.டபுள்யூ.எஸ்.பி.தஸ்ஸாநாயக்க, அவுஸ்திரேலிய மொடாச் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில் நுட்ப கணித, புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் ரன்யாமக்கில், ஆகியோர் முக்கிய சிறப்புறை ஆற்றியிருந்தனர்.
மேலும் 63 தேசிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அறிஞர்கள் தமது ஆய்வு கட்டுரைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC01172
DSC01172
DSC01177
DSC01177