நல்லாட்சிக்காலத்தில் அரசாங்கத்துடன் நெருங்கியவர்கள் பெற்றுக்கொண்ட கடன்கள் தொடர்பில் வெளியான தகவல் !

banner nsb spee loans
banner nsb spee loans

நல்லாட்சி காலத்தில், அரச வங்கிகள் பலவற்றில் அரசாங்கத்துடன் நெருங்கியவர்கள் பெற்றுக்கொண்ட பல கடன்கள் செலுத்தப்படாதிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இதனைக் கண்டறிந்துள்ளது.

அத்துடன், கடந்த அரசாங்க காலத்தில், அரச வங்கிகள் பலவற்றில் முறையற்ற வகையில் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேநேரம், அரச வங்கிகளுக்கு சொந்தமான சில சொத்துகள், முறையற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அடிப்படையிலான விசாரணைகளையும் இந்த குழு ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு 200க்கும் அதிகமான முறைப்பாடுகள் இந்த குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதிக்குப் பின்னர் நான்கு அரச வங்கிகளில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த குழுவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது