ஊரடங்கு உத்தரவுகளை மீறிய 40 பேர் கைது!

625.0.560.320.160.600.053.800.700.160.90 1 4
625.0.560.320.160.600.053.800.700.160.90 1 4

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது 11 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப் காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம் 1,162 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது மாத்தரமன்றி இதன்போது 174 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.