கோத்தபாயவுடன் மைக்பொம்பியோ பேசிய விடயங்கள்!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இன்று (28) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசிற்கு பின்னரான பொருளாதார மீள் எழுச்சிக்கு அவசியமான விடயங்களான, வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அடிப்படையாக கொண்ட பொருளாதார கூட்டுப்பங்காண்மை குறித்து பேசப்பட்டதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

ஜனநாயக சுதந்திரம் குறித்த பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபட்டார் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ள இராஜாங்க செயலாளர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

குறித்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.