தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் பதவியில் இருந்து இடைநிறுத்தம்!

unnamed 8 3
unnamed 8 3

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவரது பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் வழக்கறிஞர் லலித் யூ கமகேவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாணசபை சட்டத்துக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபாலவினால் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராயவும் ஆளுநரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த விடயம் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதித்துறை உத்தியோகத்தர் சரோஜினி குசலா வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் மத்திய மாகாண ஆளுநர் வழக்கறிஞர் லலித் யூ கமகேவினால் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் பதில் தலைவராக தற்போதைய பிரதித் தலைவர் லெட்சுமண் பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது