நாட்டில் அதிகரிக்கும் கொரோனாவின் அச்சம்!

156735 corono
156735 corono

இன்று நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவங்கொடை மற்றும் பெலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 352 பேருக்கும், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள 62 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,619 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 5,458 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,142 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 435 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

நாட்டில் இன்றுவரை 480838 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.