இலங்கையில் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை !

நாட்டில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள். ஏனைய 115 பேரும் பேலியகொடை கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மட்டும் 600 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில்தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான பாதிப்பு 9 ஆயிரத்து 800 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், நாட்டில் தொற்று கண்டறியப்பட்டோரில் இதுவரை 4 ஆயிரத்து 142 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளஅதேவேளை இன்னும் 5 ஆயிரத்து 600 பேருக்கு மேல் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.