வாழைச்சேனை காவற்துறை பிரிவில் மேலும் ஒருவருக்கு கொரோனா – 2000 க்கு மேல் தனிமைப்படுத்தல்

01 3 8 2
01 3 8 2

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் இன்று வெள்ளிக்கிழமை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனை காவற்துறை பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை வரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 2078 நபர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

01 4 8
01 4 8

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1675 நபர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 283 நபர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி 120 நபர்களும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் தனிமைப்படுத்தல் அதிகரிக்கலாம் என்றும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

01 3 8
01 3 8

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காவற்துறை பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் ஒருவரும், வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியிலும் ஒருவருமாக இன்று இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

01 1 10
01 1 10

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இனங்காணப்பட்டவர் பேலியகொட மீன் சந்தை கொத்தனியுடன் தொடர்புடையவர் எனவும், மாவடிமுன்மாரியை சேர்ந்தவர் கொழும்பில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

01 3 8 1
01 3 8 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை காவற்துறை பிரிவில் முப்பது பேரும், ஏறாவூர் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவருக்கும், களுவாஞ்சிக்குடி காவற்துறை பிரிவிலுள்ள பெரியபோரதீவு பட்டாபுரம் பிரதேசத்தில் ஒருவருக்கும், கொக்கட்டிச்சோலை காவற்துறை பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் ஒருவருக்குமாக கொரோனா தொற்றுக்கு கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 33 கொரோனா தொற்றாளர்கள் இன்று வரை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

01 4 9
01 4 9

இதனை தொடர்ந்து வாழைச்சேனை காவற்துறை பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இன்று வெள்ளிக்கிமையுடன் ஆறு நாட்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையினை கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

01 7 7
01 7 7