மட்டக்களப்பில் மஞ்சல் உட்பட சில பொருட்கள் விலை அதிகரிப்பு

20201028 154538
20201028 154538

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வாள்மிளகு, கிலோ 12 ஆயிரம்  ரூபாவும் கட்டி மஞ்சல் கிலோ 6 ஆயிரமும் ரூபாவும் உழுந்து கிலோ ஆயிரத்து 400 ரூபா வரையிலான விலைக்கு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றது என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வாள்மிளகு, ஊழந்து, மஞ்சல் போன்ற பொருட்களுக்கு அரசு கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது இந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மக்கள் தம்மை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக மஞ்சலை அதிகமாக பயன்படுத்த தொடங்கினர் இந்த நிலையில் மஞ்சலுக்கான தட்டுப்பாடு நிலவிவந்துள்ள நிலையில் தற்போது மஞ்சல் கிலோ 6 ஆயிரம் ரூபாவரை விற்கப்படுகின்றது 

அதேபோல உழுந்து தரத்துக்கு ஏற்ப ஆயிரத்து 200 ரூபா தொடக்கம் ஆயிரத்து 400 ரூபா வரையில் விற்கப்படுகின்றதுடன் பல உணவகங்களில் தற்போது உழுந்துவடை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதுடன் வடை ஒன்றின் வலை 50 ரூபாவும் தோசையின் விலை 40 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது குறித்த உணவை உண்ணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.


பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும் வாள்மிளகு கிலோ 12 ஆயிரம் ரூபா தொடக்கம் 14 ஆயிரம் ரூபாவரையில் விலை உயர்ந்துள்ளதுடன் பெருங்காயத்துக்கு தட்டுப்பாடு நிலவிவருகின்றது இந்த தட்டுப்பாடு கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து வருவதாகவும் இதனால்  இதiனை பாவனைக்கு எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா  பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 
இது தொடர்பாக வியாபாரிகளை அனுகியபோது அவர்கள் குறித்த பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இந்த பொருட்களின் கொள்வனவு விலை அதிகரித்துள்ளதுடன் நாங்கள் ஒரு சிறிய இலாபம் வைத்தே விற்கின்றோம் என தெரிவித்தனர்