அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பு !

download 3 11
download 3 11

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்.

அமெரிக்காவின் Florida பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் Joe Biden ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தினத்தில் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவக்கூடும் எனும் அச்ச நிலை காரணமாக பெரும்பாலான மக்கள் முன்கூட்டிய வாக்குப்பதிவினை மேற்கொண்டுள்ளனர்.