கருவாடு மற்றும் மாசிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

1578892013 3719
1578892013 3719

இறக்குமதி செய்யப்படும் கருவாடு, மாசி உள்ளிட்ட பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மீன்வள துறையை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் அமலாகும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் மீனுக்கு 200 ரூபா வரி அறவிடப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கருவாட்டுக்கு 127 ரூபாவும் மாசி ஒரு கிலோவுக்கு 302 ரூபா வரியும் அறவிடப்படுகின்றது.

தற்போது நாட்டில் அதிகமாக மீன் கிடைப்பதால், கருவாடு மற்றும் மாசி உற்பத்தி அதிகரித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.