50 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் – அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா மீண்டும் பரவத்தொடங்கிய பின்னர் 50 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இது முதலாவது அலையின் போது காணப்பட்ட நிலையை விட வித்தியாசமான நிலை என தெரிவித்துள்ளது.

நாட்டின் சுகாதாரத்துறை நெருக்கடியை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையொன்று அவசியம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை ஏற்கனவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளோம். சுகாதார சேவைகள் தடையின்றி இயங்குவதற்கு பொருத்தமான பொறிமுறையை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

கொரோனா வைரஸ் முதல்தடவை தாக்க ஆரம்பித்தவேளை சுகாதார பணியாளர்கள் தொடர்பில் எந்த பாதிப்புகளும் பிரச்சினைகளும் ஏற்படவில்லை. தனிமைப்படுத்தல் காரணமாக சில மருத்துவமனைகளின் முழுப்பிரிவுகளுமே மூடப்பட்டுள்ளன. இது இடம்பெறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.