கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேச மக்களால் 3 கொள்கலன்களில் கோடா மற்றும் வெற்று கோடா கொள்கலன் காவற்துறையினரால் மீட்பு

News 2
News 2

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் பிரதேச மக்களால் 3 கொள்கலன்களில் கோடா மற்றம் வெற்று கோடா கொள்கலன் ஆகியன அடையாளம் காட்டப்பட்டு காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

News 1
News 1

குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி அக்கராயன் காவற்துறை பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் இவ்வாறு சட்டவிரோத மது உற்பத்தி இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த நிலையில் 3 கொள்கலன்களில் கோடா மற்றம் வெற்று கொள்கலன் ஒன்றும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான், சோலை உள்ளிட்ட கிராமங்களில் சட்டவிரோத மது விற்பனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் மக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வந்துள்ளனர். காவற்துறையினரும்  நடவடிக்கை எடுக்கின்ற போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை .
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்களை அடையாளம் கண்டு அதனை அழிப்பதற்கான பணியில் பொதுமக்கள் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் இன்றைய தினம் குறித்த பகுதி அடையாளம் காணப்பட்டு காவற்துறையினரின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி  காவற்துறையினரால் உதவியுடன் இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தாம் தொடர்ந்தும் முன்னெடுக்க உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 


இதே போன்று கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இளைஞர்கள் ஒன்றிணைந்து சட்டவிரோத மது விற்பனை மற்றும் உற்பத்தியினை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில் வன்னேரிக்குளம் பொது மக்களும் விழிப்படைந்துள்ளனர். கிராமங்கள் தோறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அண்மைக் காலமாக பொதுமக்கள் இணைந்து தடுக்கும் செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.