ரவிராஜின் நினைவுப் பேருரை

IMG 3226
IMG 3226

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் நினைவுப் பேருரை தென்மராடசி கலாசார மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாக சாவகச்சேரியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த மலர் மாலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆகியோர் இணைந்து அணிவித்தனர்.

அதன் பின்னர் கலாசார மண்டபத்தில் நினைவுப் பேருரை நடைபெற்றது.இதில் சிறப்புரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றினார்.

மேலும் “போரின் முடிவும் போராடடத் தொடர்ச்சியும்”என்ற தொணிப் பொருளில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தாந்தை இமானுவேல் உரையாற்றினார்.

இந்த நினைவுப் பேருரை நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கடசியின் தலைவரும் பாராளுமனற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,பாராளுமனற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம்,வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள்,உள்ளுராட்ச்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.