60 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளது – சுகாதார அமைச்சர்

zSc3msdvS59Byq87zx6kbxTdRDguY0DE
zSc3msdvS59Byq87zx6kbxTdRDguY0DE

நாட்டில் கொரோனா தொற்றாளர்களில் 60 சதவீதமானோருக்கு நோயின் அறிகுறிகள் தென்படாமை சிக்கலாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டினதும் தற்போதைய நிலைமையை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என அவர் நேற்று (03) பாராளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிட்டார்.

சுகாதார நடவடிக்கைக்காக உலக வங்கியிடமிருந்து 128 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. மேலும் 22 மில்லியன் டொலர்களை எதிர்கால நடவடிக்கைகளுக்காக செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கடன் தொகையை 2023 ஆம் ஆண்டு வரை செலவழிக்க வேண்டும். இதுவரை 35 மில்லியன் டொலர்கள் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளது.

தொற்றொதுக்கல் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் அது தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்ள நேர்ந்ததாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சுகாதார வழிகாட்டல்களை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரம் புதிய திருத்தத்தின் ஊடாக காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.