கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது-டிலான் பெரேரா

fcf1abe3defe96de0528451cf667788c XL
fcf1abe3defe96de0528451cf667788c XL

நாட்டிற்குள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பாரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இருந்த போதிலும் இலங்கையை பொறுத்தவரையில் பாரிய நம்பிக்கையுடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றாளர்களை துரிதமாக அடையாளம் காண்பது மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பது போன்றவற்றில் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தை குறை கூறுவதற்கோ விமர்சிப்பதற்கோ சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு எந்தவித தகுதியும் கிடையாது என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.