நாட்டை முடக்காமலிருப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது- ஜனாதிபதி!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது போல் நாட்டை முடக்காமலிருப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தீர்மானம் ஒன்றை எடுக்கும் போது அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துவது முக்கியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

´சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களுடன் இருந்த போதிலும் அவர்களுக்கு தொற்று ஏற்படாமைக்கு காரணம் அவர்கள் உரிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதலாகும்.
அவர்களை போல சுகாதார வழிமுறைகளை ஏனையோரும் கைக்கொண்டால் நாட்டை சிறப்பான முறையில் முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும். முக்கியமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை உரியவாறு கடைப்பிடித்தால் நாட்டை முடக்க அவசியமில்லை.

நாட்டை முடக்கினால் அன்றாடம் உழைத்து வருமானம் பெறுபவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். ஆகவே குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மாத்திரம் கவனத்தில் கொண்டு நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியாது. அனைத்து பிரிவினர் தொடர்பிலும் கவனம் செலுத்தி இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும்.´என தெரிவித்துள்ளார்.