ஆழியவளை கடற்பரப்பில் 200 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், ஆழியவளை கடற்பரப்பில் 200 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை, உடுத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை டோரா பிரிவினரால் இன்று (5) ஆழியவளை கடற்பரப்பிலிருந்து ஆறு கிலோ மட்டர் எல்லைக்குள் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட பொதிகள் செய்யப்பட்ட 200 கிலோ நிறை உடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் மற்றும் மீட்கப்பட்ட கஞ்சா உள்ளிட்டவை பளை காவல்துறையினரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.