கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வழிபாடுகள் !

20201105 114318
20201105 114318

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சி அம்மன் ஆலயம் மற்றும்யாழ் நகர் மொகைதீன் ஜிம்மா பள்ளிவாசலில்யாழ்.மாவட்ட செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் சிறப்பு பூசை வழிபாடும், துவா பிரார்த்தனையும் இடம்பெற்றது.

20201105 113552 1
20201105 113552 1


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் ஆலயத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும்
யாழ் மாவட்டச்செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பாணங்குளம் நாச்சி அம்மன்ஆலயம் மற்றும் மொகைதீன் ஜிம்மா பள்ளிவாசலில் விசேட வழிபாடும்,துவா பிரார்த்தனையும்
நடாத்தப்பட்டது.

20201105 121942
20201105 121942

குறித்த வழிபாட்டில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மாவட்ட செயலக கலாச்சார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

IMG 20201105 WA0009
IMG 20201105 WA0009

யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள சுகாதார நடைமுறைக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த வழிபாடுகள் இடம் பெற்றது.

20201105 114319
20201105 114319

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறும் இவ் விசேட வழிபாட்டு பிரார்த்தனைகள் தினமும் காலை 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையில் இடம்பெறும் ஆலய தரிசனம் நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

20201105 122054
20201105 122054