6 ஆயிரம் புள்ளிகளை கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்!

1604572516 ASPI 02
1604572516 ASPI 02

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்றைய தினம் பரிவர்த்தனைகளுக்கு இடையே 6 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. பதிவாகியுள்ளது.

இன்றைய நாள் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,004.11 புள்ளிகளாக பதிவான நிலையில், கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் இது 98.20 புள்ளிகள் அதிகரித்து 1.66 சதவீத வளர்ச்சியாகும்.

இதேவேளை, இன்றைய நாளின் மொத்த புரள்வு 4.28 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் கடந்த செப்டெம்பர் மாதம் 12.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்த போதும் ஒக்டோபர் மாதத்தில் அது 4.32 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததை காணக்கூடியதாய் இருந்தது.

எவ்வாறாயினும, நவம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களின் மாத்திரம் பங்கு பரிவர்த்தனை 4.48 சதவீதம் என்ற சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.