யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடைபெற்ற கிராமிய பொருளாதார மேம்பாட்டு கூட்டம்!

யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அரசாங்க அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அவா்களது பாதுகாப்பு பிாிவினா் என நுாற்றுக்கணக்கானோா் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை உதாசீனம் செய்து கிராமிய பொருளாதார மேம்பாட்டு கூட்டம் ஒன்றை நடாத்திவருகின்றனா்.

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் அபாய பிரதேசங்கள் அல்லது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோா் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை முற்றாக உதாசீனம் செய்து குறித்த கூட்டம் நடைபெறுகிறது.

குறித்த கூட்டத்தில் கொழும்பிலிருந்து அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் அவா்களுடைய பாதுகாப்பு பிாிவினா் என நுாற்றுக்கணக்கானவா்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.