வாழைச்சேனை பிரதான வீதியில் சோதனை நடவடிக்கை!

வாழைச்சேனை காவல்துறை பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுலில் உள்ளதன் காரணமாக பிரதான வீதியின் ஊடாக பயணம் செய்யும் வாகனங்களை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் சோதனை செய்து வருகின்றனர்.

இன்று (06) குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பிரதான வீதியின் ஊடாக செல்லும் பயணிகள் செல்வதை கண்டறியும் வகையில் வாழைச்சேனை காவல்துறை பிரிவில் காவல்துறையினர்,இராணுவத்தினரும் முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது அனுமதி பெறாமல் செல்பவர்கள், முகக்கவசம் அணியாது செல்பவர்கள்;, கொரோனா வைரஸ் தொரடர்பில் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டங்களை மதிக்காது செல்பவர்களை பிடித்து காவல்துறையினரால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் இனங்காணப்பட்டுவரும் நிலையிலும், வாழைச்சேனை காவல்துறை பிரிவிலும் கொரோனா நோயாளர்கள் நாளாந்தம் இனங்காணப்பட்டு வருவதாலும், இன்று ஒருவர் இனங்காணப்பட்டமையாலும் வாழைச்சேனை காவல்துறை பிரிவில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 47 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.