நாட்டையும்,மக்களையும் கொரோனா பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டி யாழ் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு!

20201107 193145 720x450 1
20201107 193145 720x450 1

யாழ்.மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் கொரோனா தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது.

பிரதமரின்   வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் ஆலயத்தில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் யாழ் மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் பெரியகுளம் நாகவிகாரை யில் விசேடவழிபாடு நடாத்தப்பட்டது.

குறித்த வழிபாட்டில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் , யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ,வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ,யாழ்மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர்.