வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை!

0e45f777bdc925ddd17c9a713fae3594 XL
0e45f777bdc925ddd17c9a713fae3594 XL

நாட்டின் சில பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, முல்லைதீவு அலம்பில் பகுதியில் இன்றைய தினம் 158 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் முல்லைதீவு மாவட்டத்தின் வெலிஓய பகுதியில் 116 மில்லிமீற்றரும், திருகோணமலை மாவட்டத்தின் பாதாவி சிறிபுர பகுதியில் 74 மில்லிமீற்றரும், அனுராதபுர மாவட்டத்தின் மெதவச்சிய பகுதியில் 49.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது