சுகாதார ரீதியாக தீபத்திருநாளை கொண்டாடுவது இதுதான் முதற்தடவை- ஜீவன் தொண்டமான்

1 jeevan 1
1 jeevan 1

தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு என்பதையே தாரக மந்திரமாக கொண்டு இம்முறை தீபத்திருநாளை கொண்டாடயிருக்கின்றோம். எமக்கு நினைவிருக்கும் காலத்திலிருந்து சுகாதார ரீதியாக முன் எச்சரிக்கை கொண்ட தீபத்திருநாளை கொண்டாடுவது இதுதான் முதற்தடவையாகும் என் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள தீபத் திருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பல வருடங்களுக்கு முன்னர் மலையக தமிழ் மக்களிடம் மலேரியா, கொலாரா போன்ற தொற்று நோய்கள் பரவி பல்லாயிர கணக்கானவர்களை பலிகொண்டதாக நாம் அறிந்துள்ளோம்.

அக்காலங்களில் அம்மக்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடாமல் விட்டிருக்கலாம், இதுவும் அதுபோன்ற ஒரு காலக்கட்டம் என்பதால் சுகாதாரத்துறை எமக்கு விடுத்துள்ள அறிவுதல்களுக்கு அமைவாக கூட்டம் சேர்க்காது விலகியிருந்து தூய்மை பேணி இப்பெருநாளை அமைதியாக கொண்டாடுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது பொருளாதார ரீதியிலான எதிர்காலம் கடினமானதாகவே இருக்கும் என்பதால் அதை எதிக்கொள்வதற்காக நாம் எம்மை தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

எனவே தீபத்திருநாளை முன்பு போன்று சிறப்பாக கொண்டாடமுடியாமல் போனாலும் வீட்டிலேயே தமது குடும்பத்தோடு நாம் கொண்டாடுவோம். எமது நாட்டிக்கு விரைவில் வசந்தம் கொண்டுவர நாம் அனைவரும் முயற்சிப்போம்.

அனைவருக்கும் ‘நலம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்’ என ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.