நாற்பதாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர் வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்டுள்ளனர்-வெளிவிவகார அமைச்சர்

download 9 2
download 9 2

நாட்டில் கொரோனா தொற்றுநோய் ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட 40,000 இலங்கையர்களை வெளிநாடுகளிலிருந்து அரசாங்கம் திருப்பி அழைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தற்போது மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தெற்கு ஐரோப்பாவிலிருந்து 9,800 க்கும் மேற்பட்டவர்கள் வெளிவிவகார அமைச்சின் இணையதளத்தில் நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு பதிவு செய்துள்ளனர்.

மேலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக வேலை இழந்தவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு தேடுவதற்காக ஜோர்டான், கட்டர் போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கையரை மீள அழைக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது.