கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்பிய நபர் கைது !

Arrested
Arrested

நாட்டில் ஏற்படும் கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்பி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக சிலர் வீதியிலேயே மரணிப்பதாக தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டு போலியான தகவல்களை பரப்பியுள்ளார்.

இவ்வாறான வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

35 வயதுடைய கடுகண்ணாவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.