முல்லேரியா வைத்தியசாலையின் பீ.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என எதிர்பார்ப்பு!

625.500.560.350.160.300.053.800.900.160.90 7 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 7 2

முல்லேரியா வைத்தியசாலையின் பீ.சி.ஆர் இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் நாளை (16.11.2020) முதல் வழமை போன்று இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முல்லேரியா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் இயந்திரத்தால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் வைத்தியர் ஹரித அலுத்கே இன்று வெளிப்படுத்தினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,

“கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாவைலயில் பீ.சி.ஆர் இயந்திரம் அண்மையில் செயலிழந்தால் பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் காணப்பட்டன. அதன் பின்னர் அது சரி செய்யப்பட்டு மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றன. தற்போது பீ.சி.ஆர் இயந்திரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள் கிடைத்துள்ளது. அதன்படி நாளை முதல் பீ.சி.ஆர் பரிசோதனைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.” என்றார்