´தேசிய உப்பு கம்பெனி´ என பெயர் மாற்றம் பெற்ற மாந்தை சோல்ட் லிமிடெட் கம்பெனி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 42
625.500.560.350.160.300.053.800.900.160.90 42

2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளில், மாந்தை சோல்ட் லிமிடெட் கம்பெனியின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு உப்புக் கூட்டுத்தாபனத்தைத் தனியார்மயப்படுத்தி இலங்கை உப்பு கம்பெனியை உருவாக்கி வடபகுதியிலுள்ள உப்பளங்கள் தவிர்ந்த ஏனைய உப்பளங்கள் குறித்த கம்பனியின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2001 ஆம் ஆண்டு மாந்தை சோல்ட் லிமிடெட் எனும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பெனியை உருவாக்கி வடபகுதியிலுள்ள அனைத்து உப்பளங்களின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்த நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

2020.10.06 திகதியில் வெளியிடப்பட்ட 2196/27 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாந்தை சோல்ட் லிமிடெட் நிறுவனம் மற்றும் ஆனையிறவு உப்பளம் அரச வியாபாரங்கள் 02 ஆக கைத்தொழில் அமைச்சின் விடயப்பரப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு உப்பளங்களும் வெவ்வேறான வரையறுக்குப்பட்ட கம்பெனிகளாக நடாத்திச் செல்வதை விட அனைத்து உப்பளங்களையும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தல் நிர்வாகம் மற்றும் பொருளாதார ரீதியாக நன்மையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமகாலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கைத்தொழில் அமைச்சின் கீழ் முழுமையான அரச உரிமைக் கம்பனியாக இயங்கும் மாந்தை சோல்ட் லிமிட்டட் நிறுவனத்தின் பெயர் ´தேசிய உப்பு கம்பெனி´ என மாற்றியமைப்பதற்கும், வடமாகாணத்திலுள்ள ஆனையிறவு உப்பளத்தின் உரித்து, நிர்வாக நடவடிக்கைகளை தேசிய உப்பு கம்பெனிக்கு வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.