இதுவரையில் 785 காவல்துறையினருக்கு கொரோனா!

images 13
images 13

காவல்துறையினர் மத்தியில் பரவிய கொரோனா கொத்தணி 785 வரை அதிகரித்துள்ளது எனப் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த காவல் நிலையங்களிலுள்ள காவல்துறையினர் மத்தியில் பரவிய கொரோனா ரைவஸ் தொற்று, கொழும்புக்கு வெளியிலுள்ள காவல் நிலையமொன்றிலும் பரவியுள்ளமை உறுதியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடந்த சில வாரங்களாக காவல் நிலையத்திலும், போக்குவரத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

மேற்படி உத்தியோகத்தருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடமைகளில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு விதத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது எனவும் காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.