அம்பாறையில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

vlcsnap 2020 11 19 11h53m31s655
vlcsnap 2020 11 19 11h53m31s655

கடல் சூழலை பேணிப்பாதுகாப்பதற்காக, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இத்தேசிய வேலைத்திட்டத்தினுடன் இணைந்ததாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று ஒருவருட கால பூர்த்தியை முன்னிட்டும் நேற்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று 241ஆவது இராணுவ படை முகாம் பிரதேசத்தில் தென்னை மரங்கள் நட்டப்பட்டதுடன், கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட கடல் சுற்றாடல் உத்தியோகத்தர் கி.சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி பி.வி.ரேனிபிரதீப் குமார கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில், 241 ஆவது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஜனக விமலரத்ன, கடல்சார் சூழல் பாதுகாப்புகு அதிகார சபையின் வடக்கு, கிழக்கு உதவி முகாமையாளர் தி.சிறிபதி, 241ஆவது படைப்பிரிவின் சிவில் சமூக இணைப்பாளர் சமிந்த புஷ்பசிறி, இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.