முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்!பறவைகள், மீனவர்கள் பாதிப்பு

received 2711734665810458
received 2711734665810458

முல்லைத்தீவு மாவட்டத்தின் இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள நந்திக்கடல் களப்பில் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக மீன் பிடித்தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.

received 363184401414112
received 363184401414112

இவ்வாறான பின்னணியில் குறிப்பாக சில காலங்களுக்கு முன்னர் குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் இயற்கை ஒத்துக்கிடமாகவும் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

received 373894527023149
received 373894527023149

குறித்த களப்பு பகுதியில் வீதியின் ஓரத்தில் கொட்டப்படுகின்ற குப்பைகளால் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

received 413811359631109
received 413811359631109

வீச்சுவலை தொழிலைச் செய்கின்ற மீனவர்களின் வலையில் குப்பைகள் படுவதால் அவர்களது நேரங்கள் வீணடிக்கப்படுவதாகவும் குறித்த சூழல் மிகவும் பாதிப்பதாகவும் பல்வேறு பறவைகளின் வருகை காணப்படுகின்ற குறித்த பிரதேசங்களில் இவ்வாறான அசாதாரண சூழல் குப்பைகளை போட்டு ஏற்படுத்துவதன் விளைவாக இவ்வாறான பறவைகள் எதிர்காலத்தில் அழிந்து செல்வதற்கும் இயற்கை சமநிலை பாதிக்கப்படுவதற்கும் இது ஒரு காரணமாக அமையக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

received 1044806185942056
received 1044806185942056

இந்த களப்பை நம்பி மீன்பிடி தொழிலை நம்பி வாழ்வை கொண்டு செல்கின்ற மீனவர்களுக்கும் இதனுடாக பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடை செய்து குறித்த களப்பு பகுதியில் இருக்கின்ற குப்பைகளை அகற்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு குறித்த இயற்கை ஒத்துக்கிடத்துக்கு வருடத்திற்கு வருகின்ற பறவைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

received 2711734665810458
received 2711734665810458