நாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்த இரா.சாணக்கியன்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 7 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 7 4

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்தார்.

அத்துடன், இதன்போது அவர் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிள்ளையான் சிறையிலிருந்து வருகை தந்து ஆணைக்குழுவுக்கு செல்கின்றார். பின்னர் கூட்டங்களில் கலந்துகொள்கின்றார். அதனைத் தொடர்ந்து காரியாலத்துக்கு செல்கின்றார். அங்கு மக்களை வருமாறு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடுகின்றார்.

இவ்வாறு சிறையிலுள்ள கைதிகளுக்கு செய்ய முடியுமா? ஏனைய குற்றங்கள் புரிந்த சிலரை அவர்களது பெற்றோரினால் கூட காண முடியாது. காரணம் கொரோனா அச்சுறுத்தலாகும்.

ஆனால், பிள்ளையான் மட்டக்களப்பு வருகின்றார், ஆலய வழிப்பாட்டுக்கு செல்கின்றார். நிகழ்வுகளில் பங்கேற்றுகின்றார். இதனை எவ்வாறு செய்ய முடியும். இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும்.

83 கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச் சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு வாழ்வதற்கு முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி, தோல்வியடைந்துள்ளார். தோல்வியடையவில்லை என பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை.

ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4 வருடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஜனாதிபதி நிச்சயம் தோல்வியடைவார்எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்தார். .