மாவீரர் வாரம் சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்கவிட்டு உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

IMG 20201121 WA0084
IMG 20201121 WA0084

மாவீரர் வாரத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்கவிட்டு உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

IMG 20201121 WA0093
IMG 20201121 WA0093

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் மற்றும் நடை பயணமின்றி சிவப்பு, மஞ்சள் கொடிகளை தனது வீட்டு வாசலில் பறக்கவிட்டு தனது உறவுகளுக்கான நினைவேந்தல் வாரத்தை செ.அரவிந்தன் என்பவர் ஆரம்பித்துள்ளார்.

IMG 20201121 WA0089
IMG 20201121 WA0089

தனது வீட்டு வாசலின் முன்பகுதியில் கம்பங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை பறக்க விட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் இறந்த தனது உறவுகளை தான் நினைவு கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

IMG 20201121 WA0083
IMG 20201121 WA0083