மரநடுகை தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினரால் தென்னை மரக்கன்றுகள் நாட்டிவைப்பு!

002
002

தேசிய மர நடுகை மாதத்தினை முன்னிட்டு வவுனியா காத்தார்சின்னக்குளம் அ.த.க.பாடசாலையில் தென்னஞ்சோலை நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் தலமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது பாடசாலை அதிபரின் அனுமதியுடன் ஸ்ரீராமபுரம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர், காத்தார்சின்னக்குளம் கமக்காரர் அமைப்பினரின் மற்றும் ஒழுங்கமைப்பிலும் பட்டதாரி பயிலுனர்களின் மேற்பார்வையின் கீழும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் குலசிங்கம் திலீபன், பாடசாலை சமூகத்தினர், விளையாட்டு கழகத்தினர், கருப்பனிச்சாங்குளம் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் மற்றும் ஸ்ரீராமபுரம் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.