முல்லைத்தீவில் இன்று மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பம்

மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(23) திறக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்திருந்தது

இன்றைய தினம் ஆறாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கே மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இற்கமைவாக முல்லைத்தீவு மாவடடத்திலும் இன்று  மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் முக கவசம் அணிந்து கைகளை கழுவி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் விடப்பட்டிருந்தது.

இதற்கமைவாக அதிகளவானவர்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணியபோதும் ஒருசிலர் சமூக பொறுப்பற்று செயற்பட்டதனையும் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக பாடசாலை வாசலில் கைகழுவும் செயற்பாடுகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது கைகழுவும் செயற்பாடுகள் இடம்பெற்றதனை அவதானிக்க முடிந்தது.

குறிப்பிடட சில மாணவர்களும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய ஆசிரியர்களும் முகக்கவசங்களை அணிந்திருக்கவில்லை அத்தோடு பாடசாலை வாசலில் உடல் வெப்பநிலை அளவிடும் செயற்பாடுகளும் சில இடங்களில் இடம்பெறவில்லை.

அத்தோடு மாணவர்கள் சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மிக குறைவாக காணப்படுகிறது அதனைவிடவும் காலை ஆராதனைகளுக்காக குறிப்பிடட ஓரிடத்தில் அதிகளவான மாணவர்கள் ஒன்றுகூட்டப்படுவதும் அவதானிக்க முடிந்தது. 

இந்நிலையில் மாணவர்கள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணாதவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மாணவர்களை ஓரிடத்தில் கூட்டி காலை ஆராதனைகள் இடம்பெறுவதை நிறுத்தி வகுப்பறைகளில் இருந்தவாறு அல்லது மாற்று நடைமுறை ஒன்றின் ஊடாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.